பூங்காவில் மக்கள் கூடுவதை தவிர்க்க 10,000 பூக்களை மலர செய்து ஜப்பான் அரசு அசத்தியுள்ளது
கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாமல் உலகநாடுகள் பலவும் தவித்து வருகின்றன. தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றவும் சுத்தமாக கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களை கட்டுப்படுத்த ஜப்பான் அரசு புதிதாய் ஒரு முயற்சியை கையாண்டுள்ளது.
ஜப்பானில் இருக்கும் சகுரா நகரில் வருடந்தோறும் மலர் விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் விழா கொரோனா தொற்று பரவலின் காரணமாக நிறுத்தப்பட்டது. விழா நிறுத்தப்பட்டிருந்தாலும் பூங்காவில் மக்கள் கூடுவதை தடுக்க முடியாத காரணத்தினால் சுமார் 10,000 துலிப் மலர்களை ஜப்பான் அரசு பூங்காவில் பூக்கச் செய்து அசத்தியுள்ளது.