Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… பலமும், வலிமையும் கூடும்…உடல் ஆரோக்கியமா இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும் கூடும். மகிழ்ச்சி ஏற்படும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். நீங்கள் துணிந்து எடுக்கும் முடிவுகள் எதையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகளை எடுப்பதில் மட்டும் தவிர்க்க வேண்டும்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய ரொம்ப நல்லது பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |