மீனம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனுகூலமான பலன்களை அடைய பதவிகளும் கிடைக்கப் பெற்ற ஒரு மனநிலையில் இருப்பீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்தி சாதுரியம் உங்களுக்கு உண்டாகும். ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் படி காணப்படும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களில் மட்டும் பேசுவது நல்லது.
கூடுமானவரை அவரிடம் எந்தவித கோபமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். ஓரளவுதான் மனநிம்மதி ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் இருக்கும். ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் யோசித்துதான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன் மூலம் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். ஆகையால் பயணத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் அது போதும். இன்று ஓரளவு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளையும் நீங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
மனைவி மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக உள்ளது. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்