Categories
உலக செய்திகள்

கவலைக்கிடமாக….!! ”வட கொரிய அதிபர் உடல்நிலை” அமெரிக்கா பகீர் தகவல் …!!

அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் அவர் ஆபத்தான நிலையில்  இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வட கொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர்களாக இருந்த அவரின் தாத்தா, தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதோடு, சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகின்றார். இவர் உலக வல்லரசு நாடான அமெரிக்காவுடன் நேரடி மோதல் போக்கு கையாண்டு, அனு ஆயுதம் தயாரிப்பு உலகளவில் அதிரடிகளை மேற்கொண்டு வந்தார்.

கடந்த சில நாட்களாக தான் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நட்பு பாராட்டத் தொடங்கி உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்தார். இதில் வட கொரியா சென்ற அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது வரலாற்று நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் கூட பார்க்க முடியவில்லை. ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற வட கொரியா நாட்டின் நிறுவியவரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவான கிம் சுங் பிறந்த நாள் விழாவிழும் கூட அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்காதது பெரும் விவாதமாக மாறியது.

கிம் ஜாங் உன்னுக்கு என்ன ஆச்சு ? அவர் எங்கே சென்றார் ? உள்ளட்ட பல யூகங்கள் கிளம்பின. இதையடுத்து அமெரிக்க நாட்டின் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கிம் ஜான் உன் உடல் நிலை குறித்த முக்கிய தகவலை அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கிம் ஜாங் உன் உடல்நிலை கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |