சென்னையில் மே 4ஆம் தேதி முதல் அரசுப் பேருந்து சேவை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை ஓன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். வேலைக்கு வரும் போக்குவரத்து ஊழியர்கள் காய்ச்சல் மற்றும் கொரோனா சம்பந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் அவரவர்கள் இருக்கும் இடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பணியாளர்கள் அனைவரும் மொபைல் போனில் ஆண்ட்ராய்டு செயலியான ஆரோக்கிய சேதுவை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும்.கொரோனா உள்ளவர்கள் அருகில் கண்டறியப்பட்டால் உடனடியாக அவசர உதவி என்னை அளிக்க வேண்டும். நடத்துனர், ஓட்டுனர் முக கவசம் இல்லாமல் பயணம் செய்ய ஏறும் பயணிகளை அனுமதிக்கக்கூடாது.
சமூக இடைவெளி, சமூக விலகலை கடைப்பிடித்து பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். அனைத்து பணியாளரும் முக கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். பணியாளர்கள் பேருந்தில் சனிடைசர் வைத்திருக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.