Categories
அரசியல்

கொரோனாவை விட கொடியது…. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க…. முதல்வரிடம் ஆண்கள் மனு….!!

கொரோனாவை விட பெரிய பிரச்சனையான குடும்ப வன்முறை பிரச்சனைகளிடமிருந்து ஆண்களை பாதுகாக்குமாறு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பெண்களை பாதுகாப்பதற்காக மகளிர் சங்கங்கள் இருப்பதுபோல், ஆண்களை பாதுகாக்கவும் சங்கங்கள் இருக்கிறது. அந்த வகையில், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான வக்கீல் அருள்துமிலன் என்பவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

கொரோனாவிடமிருந்து பாதுகாக்க மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து, நம்மை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் ஆண்களுக்கு வீடுகளுக்குள் பாதுகாப்பு என்பது இல்லை. பரிதாபமான நிலையில் ஆண்கள் உள்ளனர். குடும்ப வன்முறையால் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் ஆண்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் தங்களுக்கு ஆதரவான சட்டங்களை காட்டி ஆண்களை மிரட்டியும், அடிமைப் படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் உணவுக்காக கையேந்தும் நிலை என்பது ஆண்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த கொடுமை, குடும்ப வன்முறை இவற்றையெல்லாம் ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் துன்பங்களை மனதிற்குள் பூட்டி வைத்து கொள்கின்றனர்.

ஆனால் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியவை இந்த 144 தடை உத்தரவு காலகட்டத்தில் பெண்களுக்கு அதிக வன்முறை நிகழ்வதாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வீட்டிற்குள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை முறையிட கூட இடமில்லாத இந்த சமூகத்தில், இப்படி ஒரு அறிக்கை வெளியானது ஒருதலைபட்சமாக கருதப்படுகிறது என்றும், குறைந்தது ஆண்களின் புகாரை ஏற்க ஒரு ஹெல்ப்லைன் நம்பரையாவது தமிழக அரசு உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |