மே 3 க்கு பிறகு பேருந்துகளில் முக கவசம் அணியாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசானது 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே தற்போது முடங்கி கிடக்கின்றனர். இதற்குமுன் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில்,
பாரத பிரதமர் நரேந்திர மோடி மே 3 வரை நீட்டித்து உத்தரவிட்டார். அவரது அறிவுரையின்படி நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. 3க்கு பிறகு ஊராடங்கானது முழுமையாக நீக்கப்படாது. ஆனால் தளர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்,
மே 3க்கு பிறகு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படலாம் என்றும், அப்படி இயக்கப்படும் பட்சத்தில், பேருந்துகளில் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.முக கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது என்றும், பயணிகள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.