கர்நாடகாவில் மதுக்கடைகள் மூடியுள்ளதால் கள்ளுக்கடையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் வரலாற்றுச் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால்,
மதுக்கடைகள் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடி கிடக்கிறது. இதுவரை இப்படி நிகழ்ந்ததே இல்லை. மது பிரியர்கள் அனைவரும் இந்த காலகட்டத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அம்மாநில அரசு தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் கள்ளுக்கு மட்டும் அனுமதி வழங்கிய நிலையில், ஒரு லிட்டர் ரூபாய் 30 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தென்னங்கள்ளு விலை தற்போது ரூபாய் 300 லிருந்து 350 வரை விற்பனையாகிறது. மதுக்கடைகள் திறக்கபட்ட பின்பு தான் விலை குறையும் என்று கூறப்படுகிறது.