Categories
தேசிய செய்திகள்

நம்பி தானே வாங்கினோம்….. இப்படி பண்ணிட்டீங்களே….. சீனா மீது கடுப்பான ICMR….!!

கொரோனா சோதனையை மேற்கொள்ள உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி தவறான முடிவுகளை அளிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவை போல் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றன. ஏனெனில் அதற்கு அறிகுறியாக சொல்லப்படும் சளி, இருமல் போன்றவை இல்லாமலேயே 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

ஆகையால் விரைவான சோதனை மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிய முடியும். எனவே கொரோனா பரிசோதனையை முப்பது நிமிடங்களுக்குள் விரைந்து முடிப்பதற்காக ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கருவியை சீனாவிடம் இருந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் கொள்முதல் செய்தன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தவறான முடிவை அளிப்பதாக வந்த தகவல் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனையை ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் மேற்கொள்வதை நிறுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

Categories

Tech |