Categories
லைப் ஸ்டைல்

வீட்டில் எலி தொல்லையா.? எளிமையான முறையில் விரட்டி அடிப்போம்..!!

வீட்டில் இருக்கும் எலி தொல்லையை எளிமையான முறையில் சீக்கிரமே விரட்டி விடலாம்.

அனைவரின் வீட்டில் பிரச்சனையாக இருப்பது இந்த எலி தொல்லை தான். விவசாயிகள் பெரும்பாலானோர் இந்த எலி தொல்லையினால் பெரும் பாடதிப்புள்ளாகின்றனர்.வீட்டில் உள்ள பெண்களும் இந்த எலி தொல்லையை  சமாளிக்கிறார்கள். இவைகளால் உண்டாகும் சேதம், இழப்புகளை எளிமையாக எவ்வாறு தவிர்ப்பது என்றும் எலியை எவ்வை விரட்டி அடிக்கலாம் என்றும் பார்ப்போம்.

டிப்ஸ்- 1:

வீட்டில் இருக்கும் 2 பாரசிட்டமால் மாத்திரையை எடுத்து நன்கு பொடியாக்கி வைத்து கொள்ளவும். இதை தனியாக ஒரு பவுலில் கொட்டி அதனுடன் 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கொள்ளவும். அதுமட்டும் இல்லாமல் அரிசி மாவு அல்லது கடலை மாவு ஏதாவது ஒன்று சேர்த்து கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் சேர்த்த பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு செய்யும்பதம் அளவிற்கு செய்து கொள்ளுங்கள். பின்னர் இந்த  மாவை சிறிய சிறிய உருண்டை வடிவில் உருட்டி கொள்ளுங்கள். இந்த உருண்டையை எலி வரும் இடத்திற்கு சென்று வைத்தால் கண்டிப்பா எலி  அந்த பக்கமே தலை வைத்து படுக்காது.

டிப்ஸ்-2:

எலிக்கு பிரியாணி இலை வாடை என்றாலே சுத்தமா புடிக்காது. உங்கள் வீட்டில் எலி தொல்லை உடனே நீங்குவதற்கு பிரியாணி இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டாலே போதும். உங்கள் வீட்டில் எலிகளின் தொல்லை இருக்காது.

டிப்ஸ்-3:

மிளகு பொடி எலி வரும் இடத்தில் வைத்தால் எலி தொல்லை சுத்தமா குறைந்துவிடும்.

டிப்ஸ்-4:

வெங்காய சாறு எலிகளுக்கு புடிக்காது. அதனால் ஒரு வெங்காயம் எடுத்துக்கோங்க அந்த வெங்காயத்தை நல்லா மிக்ஸில அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு தனியாக இன்னொரு வெங்காயம் எடுத்து வட்டம் வட்டமாக நறுக்கி எடுத்து கொள்ளவும். வட்டமாக நறுக்கிய வெங்காயத்தை அரைத்து வைத்துள்ள வெங்காய சாற்றுடன் நனைத்து  2 அல்லது 3 இடங்களில் இதை வைத்தால் எலிகள் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

டிப்ஸ்-5:

சிறிய குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பா பேபி பவுடர் இருக்கும். பேபி பவுடர்க்கு எலிகள் வராது. அதாவது பேபி பவுடரை எலிகள் எங்கெல்லாம் வருதுன்னு பார்த்துட்டு அங்க நீங்க பவுடரை லைட்டா தெளித்து விட்டாலே போதும். கண்டிப்பா இந்த வாசனைக்கு  எலி தொல்லை இருக்காது.

 டிப்ஸ்-6: 

புகையிலை அதாவது இதை(கட்ட புகையிலை) என்று கூறுவார்கள். அந்த கட்ட புகையிலையை தூள் செய்து கொள்ளவும். அடுத்து அந்த தூளை எலி வரும் இடத்தில் இந்த தூளை வைத்தாலே போதும். அந்த புகையிலை வாசனைக்கு அறவே எலிகள் வராது.

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய தொல்லையான எலியை விரட்டுவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான முறையில் சில வழிகள் செய்து பாருங்கள். அதை விட்டுவிட்டு கடையில் விற்கக்கூடிய  எலிக்கொல்லி மருந்துகளை வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

 

Categories

Tech |