பிரிட்டன் அறிவியலாளர்கள் 20 நிமிடங்களில் முடிவுகளைத் தரும் கொரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டனின் தென் வேல்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய 20 நிமிடங்களில்முடிவுகளை தரும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியை உருவாக்குவதற்கு 100 பவுண்டுகளுக்கும் குறைவான தொகையை போதும் என்று மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளனர்.. 100 பவுண்டு என்பது இந்திய மதிப்பில் 9,458 ரூபாய் ஆகும்..
நோயாளிகளின் மூக்கில் இருந்து எடுக்கப்படும் swap ஒன்றில் கொரோனா வைரஸின் டி.என்.ஏ இருக்கிறதா என்பதை pcr முறையில் இந்த கருவி கண்டறியும்.. swap என்பது என்னவென்றால், குச்சி ஒன்றின் முனையில் பஞ்சு சுற்றப்பட்டு, காது குடைவதற்கு பயன்படுத்தப்படும் ear bud போன்று இருக்கும்.
இந்த புதிய கருவி இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த கருவியின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், அது மிகவும் எளிதில் வேறு இடத்திற்கு தூக்கி செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரடியாக கொண்டு சென்று சோதனை செய்யலாம். உதாரணமாக முதியோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கு நல்ல பயன் தரக்கூடியதாக இருக்கும்.
ரேபிட் கிட் கருவிகள் 30 நிமிடத்தில் கொரோனா முடிவுகளை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.