இந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரேபிட் கிட்டுகளை பயன்படுத்த வேண்டம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தினம்தோறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு தினந்தோறும் மாலை 4 மணிக்கு நடைபெறும். இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிறைய முக்கியமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரேபிட் டெஸ்ட் கிட்டுக்களை அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு அனுப்பி உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக பலனளிக்கவில்லை. அவை தவறான முடிவுகளை காட்டுவதாகவும் குறிப்பாக ராஜஸ்தான் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் நெகட்டிவ் என்று வந்தவர்களுக்கு பிறகு பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. இந்த பரிசோதனை துல்லியமாக இல்லை, தவறான முடிவுகளையும் காட்டுகிறது என்ற ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் நாங்கள் ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் பரிசோதனை செய்யப்போவதில்லை என்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள். இதற்க்கு விளக்கம் அளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எந்த மாநில அரசுகளும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனென்றால் ரேபிட் டெஸ்ட் கிட்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இன்னும் சில தினங்களில் நாங்கள் தெளிவுபடுத்த இருக்கின்றோம் புதிய அறிவுறுத்தல்களை கொடுத்து இருக்கின்றது.