திமுக சார்பில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.
7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் தேர்தலானது நடைபெறுகின்றது . இந்நிலையில் திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . இந்நிலையில் திமுக போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.
அதில் திமுக சார்பில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் வருமாறு ,
1. பூந்தமல்லி- கிருஷ்ணசாமி
2. பெரம்பூர்- ஆர்.டி.சேகர்
3. திருவாரூர்- பூண்டி கலைவாணன்
4. குடியாத்தம்- காத்தவராயன்
5. சாத்தூர்- சீனிவாசன்
6. பரமக்குடி- சம்பத்குமார்
7. பாப்பிரெட்டிப்பட்டி- மணி
8. ஆம்பூர்- வில்வநாதன்
9. அரூர்- கிருஷ்ணகுமார்
10. நிலக்கோட்டை- சவுந்திரபாண்டியன்
11. தஞ்சாவூர் -நீலமேகம்
12. சோளிங்கர்- அசோகன்
13. திருப்போரூர்- செந்தில்
14. விளாத்திகுளம் – ஜெயக்குமார்
15. பெரியகுளம்- சரவணக்குமார்
16. ஆண்டிப்பட்டி ஏ.மகாராஜன்
17. மானாமதுரை – இலக்கியதாசன்