Categories
உலக செய்திகள்

ஆதாரம் இருக்கா… கொரோனாவை மனிதனால் உருவாக்க முடியாது… விளக்கமளித்த சீனா!

கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என்று சீனா விளக்கமளித்துள்ளது..

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று வரும் இந்த கொரோனா வைரஸை சீனா தான் பரப்பிது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.. இதனிடையே வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டிடியூஷன் ஆய்வுக்கூடத்தில் தான் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன..

இந்த நிலையில் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என சீனா விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக, வைராலஜி ஆய்வுக்கூடத்தின் இயக்குனர் யுவான் ஜிமிங் கூறுகையில், கொரோனா வைரஸ் செயற்கையானது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடையாது எனவும், ஆதாரம் இல்லாமல் சிலர் மக்களை தவறான முறையில் வழி நடத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற தகவல்கள் முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டது என தெரிவித்த அவர், இதுபோன்ற வைரசை உருவாக்கும் திறன் தற்போது மனிதர்களிடம் கிடையாது என்றும், இதனை  தாங்கள் நம்பவில்லை என்றும்  தெரிவித்தார்.

Categories

Tech |