நாடு முழுவதும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பயன்படுத்த தடை விதித்து ICMR உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சோதனையை விரைவாக சீனாவிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கருவியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வாங்கி பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி தவறான முடிவுகளை அளிப்பதாக வந்த புகாரை அடுத்து,
புகார் வந்த மாநிலங்களில் மட்டும் முதலில் கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின் ஐ.சி.எம்.ஆர் இது குறித்து விசாரணை நடத்தி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த இரண்டு நாட்களுக்கு முறையான அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் யாரும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.