உலகளவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று 210 நாடுகளுக்குப் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரம் படி உலகம் முழுவதும் 2,500,993 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த 171,693 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 658,114 பேர் கொரோனாவில் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 792,938 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் – 204,178, இத்தாலி – 181,228, பிரான்ஸ் – 155,383, ஜெர்மனி – 147,103, இங்கிலாந்து – 124,743, துருக்கி – 90,980, ஈரான் – 83,802, சீனா – 82,758, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 42,518 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் – 24,114, ஸ்பெயினில் 21,282, பிரான்ஸ் – 20,265, இங்கிலாந்து – 16,509 பேர் பலியாகியுள்ளனர். அதிகட்சமாக ஜெர்மனியில் 95,200 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.