Categories
அரசியல்

கண் வழியாக கொரோனா பரவுமா.? வாய்ப்பே இல்லை – டாக்டர் பிரகாஷ் விளக்கம்..!!

கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவரிடமிருந்து வைரஸ் பரவாது என கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்கள் மருத்துவ விதிமுறைப்படி புதைக்க படுவதால், அதன் மூலம் பொதுமக்களுக்கு பரவாது எனவும் உறுதிபட தெரிவித்தார். டாக்டர் பிரகாஷ் கூறியதாவது; ஒரு இறந்த மனிதர்களிடமிருந்து இந்த கொரோனா வைரஸ் எக்காரணத்தைக் கொண்டும் பரவ வாய்ப்பே கிடையாது. இதுதான் மக்கள் முழுமையாக நம்ப வேண்டும், தெரிந்துகொள்ளவேண்டும்.

ஏனென்றால் கொரோனா  வைரஸ் பரவுவது மூச்சு வழியாகத்தான். இறந்த மனிதனுக்கு மூச்சு வருவதற்கான வாய்ப்பே கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் இறந்த மனிதர்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவும் என்பது முழுக்க முழுக்க உண்மை கிடையாது. ஒருத்தர் கொரோனோவால் இறந்தார் என்றால் அவருடைய உடலை நம்ம பேக் பண்ணி டிசின்பெக்ட் பண்ணி எந்த வழியிலும் நிலவு கூட எந்த ஒரு குறையும் இல்லாத அளவிற்கு அந்த உடலை சுத்தப்படுத்திய பிறகு தான் அந்த உடலை தகனம் செய்யவோ,

எரிக்கவோ, புதைக்கவோ செய்கிறோம். புதைக்கும் போது எட்டடி ஆழத்தில் தான் புதைக்கிறோம், அல்லது சாம்பலாக்கி விடுகிறோம்.  இதில் வைரஸ் உயிரோடு இருக்க எந்த வாய்ப்பும் கிடையாது. அந்த மனிதருடைய சாம்பலை நாம் எடுத்துப் பார்த்தால் அதில் வைரஸ் கண்டிப்பாக இல்லை இது உறுதியாக கூறுவேன் இதற்கு அரசும் எல்லா விளக்கமும் கொடுத்திருக்கிறது.

Categories

Tech |