நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 பேர் காரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 28வது நாளாக அமலில் உள்ளது.
இந்தநிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மகாராஷ்ட்ரா, டெல்லி, ராஜஸ்தான், தமிழகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ தண்டி செல்கிறது. உலகளவில் இதுவரை 2,496,660 (24.96 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிரிழப்புகள் 171,240 (1.71 லட்சம்) ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 655,888 (6.55 லட்சம்) ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.