Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… நண்பர்கள் உதவி கிடைக்கும்.. எதிரிகள் விலகி செல்வார்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பதவியில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வருமானம் உயரும், பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருந்த நண்பர்கள் காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். எதிரியாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியையும் பிடிப்பார்கள்.

வியாபாரப் போட்டியில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் சீராகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்:7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |