தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்தி தரும் நாளாக இருக்கும். தடைகள் அகலும், புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் விதத்தில் அமையும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். தேவையான நிதி உதவி கிடைக்கும். உற்சாகமாக பணிகளை கவனித்து கொள்வீர்கள். அலுவலக வேலைகளை செய்வதில் மட்டும் கொஞ்சம் தாமதம் இருக்கும் கவலை வேண்டாம், பின்னர் சரியாகும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.