ஊரடங்கு காலகட்டத்தில் பாலை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வளத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் காய்கறி பழங்களை அதிக விலைக்கு விற்று வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.
அந்த வரிசையில் தற்போது ஆவின்பால் வந்துள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி பாலை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஆவின் பால் பல்வேறு இடங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.