உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த கன மழையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மூன்று பேர் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் பாலியா மாவட்டத்தில் பெய்த மழையில் வெளியே நடமாடிய நரேந்திரர் யாதவ் மற்றும் சாந்தி தேவ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி நேற்று இரவு மரணமடைந்தனர்.
அதேபோல் பிரதாப்கர் மாவட்டத்தில் ஹரி நரேன் என்ற இளைஞர் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.