மேஷம் ராசி அன்பர்களே… ! இன்று வீண் பணிகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். வியாபார விருத்தி உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் ஒழுங்கு செய்து கொள்வீர்கள். நீண்டதூரப் பயணங்களில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் இன்று முக்கியமான பணி நிறைவேற தாமதம் ஆகலாம். நலம் விரும்புவோரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றங்களை செய்வீர்கள்.
அளவான பணவரவு தான் கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல்நலம் சீராக உதவும். மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும் திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். இன்று கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும். கூடுதலாகத்தான் பொறுப்புகளும் வந்து சேரும். இன்று எதிலும் கவனமாக இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். காரியத்தடை தாமதம் கொஞ்சம் வரலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகவே இருக்குங்க. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை இல்லத்தில் நடத்தினால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல மற்றும் இளம் சிவப்பு நிறம்