Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…புதிய பாதை புலப்படும்…ரகசியங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்..!!

மீன  ராசி அன்பர்களே..! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வார்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு ஆகியவை வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உங்களுடைய ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை உருவாக்கும். பணவரவை விட பொது இடங்களில் தான் செலவு ஏற்படும். வாகனத்தை மித வேகமாக பின்பற்றுங்கள். காரியத்தடை தாமதம் கொஞ்சம் வந்து செல்லும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்.

பொறுமையாக இருங்கள், உங்களுக்கு அனைத்து காரியமும் சரியாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. அதேபோல சில முக்கியமான வேலைகளை கவனமாகத்தான் நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். குடும்பப் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதுவும் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முரட்டு தைரியம் மட்டும் தயவுசெய்து வேண்டாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இன்று மனதை தெளிவாக வைத்துக் கொண்டாலே காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

காதலர்கள் கொஞ்சம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள், தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை.

Categories

Tech |