Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… தேசப்பற்று அதிகரிக்கும்… நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தேசப்பற்றும், தெய்வப் பற்றும் மேலோங்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறும். தாய் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். மனதில் கூடுதல் தைரியம் பிறக்கும். எதிர்ப்புகளை சாதுர்யமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும்.

பிள்ளைகளிடம் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழல் மட்டும் உருவாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். காதல் கைக்கூடி முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |