Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இருமலில் இருந்து விடுபட அதிமதுர தேங்காய் பால்..!!

இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம்.  .

தேவையான பொருட்கள் :

அதிமதுரம் –  6 துண்டுகள்
தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் –  கால் டீஸ்பூன்

செய்முறை :

முதலில் அதிமதுர துண்டுகளை தூளாக்கி அதை  நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதனை  அரைத்து  பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்து கொள்ளவும். பிறகு
வாணலியில் அந்த சாறை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். இதனுடன் சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதோ அருமையான அதிமதுர தேங்காய் பால் ரெடி.

Categories

Tech |