Categories
உலக செய்திகள்

நடுங்க வைக்கும் கொரோனா… 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்தி… சோகத்தில் அமெரிக்கா!!!

அமெரிக்காவில் ‘பாஸ்டன் குளோப்’ பத்திரிகையில் கொரோனாவால் இறந்தவர்களின் இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஆனாலும் ஒரு சில நாடுகளில் மருந்து கண்டுபிடிப்பதில் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரசால் அதிக மக்களை இழந்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில்  இருக்கிறது.. அந்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை எகிறிக் கொண்டே வருகிறது..

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆயிரம் என கூறப்படுகின்றது. இதுவரை அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 1,700 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு வெளியாகும் “பாஸ்டன் குளோப்” (The Boston Globe) பத்திரிக்கையில் 15 பக்கங்களுக்கு கொரோனாவால் காலமானார் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இத்தாலியிலும் இதேபோன்றுதான் பலியானவர்களின் விவரங்கள்  அதிக பக்கங்களில் வெளியானதை பலரும் நினைவுகூர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |