Categories
உலக செய்திகள்

ஒரே நாளில்…! 2,804 பேர் மரணம்… ”8 லட்சத்தை தாண்டி” உருக்குலைந்த USA …!!

கொரோனாவின் ஆதிக்கமாக விளக்கும் அமெரிக்கா நீங்கா துயரில் இருந்து வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

உருக்குலைந்த வல்லரசு நாடு : 

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2,556,476 பேர் பாதித்துள்ளனர். 177,607 பேர் உயிரிழந்த நிலையில், 690,224 பேர் குணமடைந்துள்ளனர். 1,688,645 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 57,254 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது.

Coronavirus In World Live Updates Hindi News Covid19 22nd April ...

இனி கவலை இல்லை : 

 

தினமும் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்பட்டு வருவதால் சொல்ல முடியாத துயரை அமெரிக்கா சந்தித்து வருகின்றது. உலக நாடுகளுக்கு சீனா அனுப்பிய கொரோனா மருந்து, சிகிச்சை பொருட்களையெல்லாம் தங்கள் நாட்டிற்கு மிரட்டி திருப்பி விட்ட அமெரிக்காவில் மரணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபர் ட்ரம்ப் கொரோனாவில் இறுதி கட்டத்தை கடந்து விட்டோம், இனி கவலை இல்லை என்றெல்லாம் கடந்த வாரம் தெரிவித்தார். ஆனால் அமெரிக்காவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரே நாளில் 2,804 பேர் மரணம் : 

நேற்று ஒரே நாளில் புதிதாக 25,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடதால், கொரோனா பதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2,804 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 45,318  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 82,923 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 2804 பேர் இருந்துள்ளது இதுவரை இல்லாத ஓன்று. கொத்து கொத்தாய் ஏற்படும் கொரோனா மரணத்தை சமாளிக்க முடியமால் அமெரிக்கா திணறி வருகின்றது.

Categories

Tech |