Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு புது சிக்கல்…!! எல்லாத்துக்கும் சீனா தான் காரணம் …..!!

சீனா அனுப்பிய தரமற்ற ரேபிட் கிட்டுகளினால் இந்தியாவுக்கு புது சிக்கல் எழுந்துள்ளது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கொடூரத்தை நிகழ்த்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவ்டிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கின்ற்றது. நாட்டிலே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையி கொண்ட நாடான இந்தியா கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மிக கவனமாக கையாண்டு வருகின்றது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை மாநிலங்கள் அளவில் முடுக்கி விட்டுள்ளது.

தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட் :

கொரோனா வைரஸ் அறிகுறியை வேகமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டு மக்களை தூக்கி வாரிப்போட்டது. குறிப்பாக ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் நெகட்டிவ் என்று வந்தவர்களுக்கு பிறகு பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது.

ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை வேண்டாம் :

ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை துல்லியமாக இல்லை, தவறான முடிவுகளையும் காட்டுகிறது என்று கூறி ராஜஸ்தான் மாநிலம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் பரிசோதனை செய்யப்போவதில்லை என்று அறிவித்தது. இதுகுறித்து நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த மாநில அரசுகளும்  ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் சோதனை நடத்த வேண்டாம் என்றும், ரேபிட் டெஸ்ட் கிட்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இன்னும் சில தினங்களில் தெரிவிக்கின்றோம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது.

இன்னும் 11 நாட்கள் :

ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்திய இந்த தகவல்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு தங்களின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கக்கூடிய பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது வரை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றது.இந்த நிலையில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது மே 3ஆம் தேதிக்குள் கொரோனவை கட்டுப்படுத்த முடியுமா ? என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதிக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.

குறையாத கொரோனா :

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் நாம் 30ஆவது நாளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றோம். இந்த 30 நாட்களும் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது என்று சொல்லப்பட்ட நிலையில் நேற்று அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து.

மாநிலங்களின் நிலை : 

கேரளாவில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் நேற்று கிட்டத்தட்ட்ட 20 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கம் குறையவில்லை என்பதை உணர்த்துகின்றது. இதே  நிலை தான் மற்ற மாநிலங்களிலும் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தமிழ்நாடு என அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்றம், இறக்கம் என்ற நிலையிலே இருக்கின்றது.

புது பிரச்சனை :

இந்தியாவில் ஊரடங்கு முடிய இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை வேண்டாம் என்று ICMR தெரிவித்துள்ளது புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தாக்கம் எந்த அளவு இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மே 3ஆம் தேதிக்குள் கொரோனவை கட்டுப்படுத்த முடியுமா ? ஊரடங்கு நிரந்தரமாக முடிவுக்கு வருமா ? என்ற எண்ணற்ற கேள்விகள் எழும்புகின்றன.

அறிகுறி இல்லாமல் கொரோனா : 

 

 

சில தினங்களுக்கு முன்பு ICMR புதுக்குண்டை தூக்கி போட்டது. கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட எதுமே இல்லாமல் 80 சதவீதத்தினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்திருந்தது இந்த நோய் தொற்று இந்தியாவில் எந்த மாதிரியான தாக்கத்தை இந்தியாவில் உண்டாக்க போகின்றது என்று நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களுக்கு மட்டும் நாம் சோதனை செய்து வந்த நிலை கொரோனா அறிகுறி இல்லாமல் 80%மானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வேதனையின் உச்சமாக இருக்கின்றது.

வவ்வால்களுக்கு கொரோனா :

 

இதே போல வெளிநாட்டின் ஆய்வாளர்கள் வவ்வால்கள் மூலம் கொரோனா பரவினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்த நிலையில், இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வெளவால்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா இருப்பது உறுதி செய்ய பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. இதனை அனைத்தும் நமக்கு உணர்த்துவது கொரோனாவின் தாக்கத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகின்றது என்று தான்.

யோசிக்க வேண்டிய அம்சங்கள்:

சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா பரவ தொடங்கி கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு பிறகு தான் அங்கு ஊரடங்கு விலகிக்கொள்ள பட்டது. அதுவும் சீனா கொரோனவை கட்டுப்படுத்த 7 நாட்களில் 5000 பேர் சிகிச்சை பேரும் அளவிற்கான 5 தற்காலிக மருத்துவமணையை அமைத்தது. இப்படியான சூழலில் தற்போது சீனாவுக்கு அதிகப்படியாக மக்கள் தொகையை கொண்டுள்ள நாம் கொரோனா விஷயத்தை கையாள இன்னும் அதிக நாட்கள் தேவைப்படுகின்றது.

ஊரடங்கு நீட்டிப்பு : 

சீனாவின் தரமற்ற ரேபிட் பரிசோதனை கிட் ஏற்படுத்திய தாக்கம் மேற்க்கூறிய பல அம்சங்களையும் நினைவு கூற வைக்கின்றது. சீனாவால் ஏற்பட்ட புதுப்பிரச்சனையால் மே 3ஆம் தேதிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினமாகதான் தெரிகின்றது. மீண்டும் ஒரு ஊரடங்கு நீட்டிக்க மேற்கூறிய அம்சங்கள் இடமளித்துள்ளன.

சாதுரியமாக கையாளும் மத்திய அரசு : 

கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மிக சாமர்த்தியமாக எடுத்து வரும்  மத்திய அரசு கொரோனாவை திறம்பட கையாளும் என்று நாம் நம்பலாம். அண்டை நாடான சிங்கப்பூர் கொரோனாவை விரட்ட ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்தியாவிலும் பிரதிபலிக்க வாய்ப்பிருந்தாலும் கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்ற முடிவில் நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்தால் அது மக்கள் நலனை பாதுகாக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது.

 

Categories

Tech |