Categories
மாநில செய்திகள்

கொரோனா பிடியில் இந்தியா – 20 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு; 640 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் இதுவரை 1,77,459 பேர்உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 50 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இதுவரை 3870 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,218 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 722 பேர் குணமடைந்துள்ளனர் என தகவல் அளித்துள்ளனர். குஜராத் – 2,178, டெல்லி – 2,156, ராஜஸ்தான் – 1,659, தமிழகம் – 1,596, ம. பிரதேசம் – 1,552, உ.பி – 1,294, தெலுங்கானா – 928, ஆந்திரா – 754 பேர், கேரளா – 427, கர்நாடகா – 418, மே. வங்கம் – 423, காஷ்மீர் – 380, புதுச்சேரி – 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |