Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே உத்தரவு….!! ”ஒட்டுமொத்த மருத்துவர்களும் மகிழ்ச்சி” ஹீரோவான எடப்பாடி …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரணம் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் மஹாராஷ்டிராவுக்கு கடும் போட்டி கொடுத்து இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு முழு காரணம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தரமான மருத்துவம், சுகாதாரம் நடவடிக்கை ஆகும். தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸ் பரவிய காலம் முதலே மருத்துவமனைகளை ஆய்வு செய்து, ஆய்வு கூட்டங்கள் நடத்தி பணிகளை முடுக்கி விட்டார்.

அதே போல மருத்துவர்களின் தேவையான பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதோடு மட்டுமல்லாமல் சீனாவில் கொரோனா பரிசோதனை கருவிகளையும் ஆர்டர் செய்தார். அதோடு மட்டும் நின்று விடாமல் மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதிகளவு கொரோனா பரிசோதனை மையத்தையும் தமிழகத்திற்கு வாங்கிக் கொடுத்தார்.

இதன் மூலம் தமிழக மக்களுக்கு சுகாதாரமான, நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டடு கொரோனா மரணம் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஆனாலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பல்வேறு சர்சையை ஏற்படுத்தியது. இதனால் கொரோனாவுக்கு எதிராக முன்னணி வரிசையில் நிற்கும் மருத்துவர், சுகாதாரபணியாளர்கள்  பல்வேறு கோரிக்கையை முன்வைத்தனர்.

இதையடுத்து பல்வேறு உத்தரவுகளை தமிழக முதல்வர் பிறப்பித்தார். அதில், கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உயிரிழந்தால் 50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர் உட்பட அனைத்து துறை பணியாளர்களும் உயிரிழந்தால் ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அதே போல ரூ 10 லட்சமாக இருந்த நிவாரணத்தை 50 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியின் போது இறக்கும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடல் பாதுகாப்பாக, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். முதல்வரின் இந்த உத்தரவு அனைத்து வகை மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |