கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலபேர் தங்களது வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளத்தின் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு பற்றி பாடல் ஒன்று எழுதி, இயக்கியுள்ளார். அந்த பாடலை அவருடன் இணைந்து பல பிரபலங்களும் பாடியுள்ளனர்.
“அறிவும், அன்பும்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை கமல், ஸ்ருதி ஹாசன், அனிருத், சித்தார்த், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன், முகேன் உள்ளிட்டோர் பாடி அசத்தியுள்ளார். இந்த விழிப்புணர்வு பாடலை நாளை காலை 11 மணிக்கு வெளியிடுவதாக இருக்கின்றனர்.
https://twitter.com/ikamalhaasan/status/1252834992331218945?s=20