Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் அரங்கேறும் பயங்கரவாதம் குறித்து பத்திரிகையாளர் ட்வீட்: எப்.ஐ.ஆர் பதிவு செய்தது காவல்துறை!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் சமூக ஊடகத்தில் ஆட்சேபிக்கத்தக்க பதிவுகளை பதிவிட்டது தொடர்பாக மற்றொரு பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 3 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கோஹர் கிலானி மீது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் யுஏபிஏ- வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் தனது ட்விட்டர் பதிவில் “glorifying terrorism in Kashmir Valley” என்று பதிவிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சைபர் செல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு பாரபட்சமற்ற சமூக ஊடக தளங்களில் தனது பதிவுகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஜீலானி ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவது, என்ற பதிவு நாட்டிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் மனதில் அச்சம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவை பொது அமைதிக்கு எதிரான குற்றங்களை ஆணையிடுவதற்கும் வழிவகுக்கும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2 பத்திரிகையாளர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று கூறி ட்வீட் செய்த ஸ்ரீநகரின் சைபர் போலீஸ் பிரிவின் தலைவர் மீது பதிவு செயப்பட்ட வழக்கில் விசாரணை இன்று நடைபெற்று வருகிறது.

Categories

Tech |