Categories
சினிமா தமிழ் சினிமா

“பூமிக்கு ஆபத்து”… குறும்படம் மூலம் விளக்கிய மன்சூர் அலிகான்..!!

சர்வதேச பூமி தினமான இன்று மன்சூர் அலிகான் பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலமாக சொல்லி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக நடித்து இருக்கும் மன்சூர் அலிகான், வில்லன் மட்டுமின்றி  ஹீரோ, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னுள் கொண்டு உள்ளவர்.  இவர் அரசியலில் ஈடுபட்டு வருவது மட்டுமில்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் மக்களிடையே பல விதமான வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இன்று சர்வதேச பூமி தினம் ஆகும். இதை முன்னிட்டு பூமிக்கு வர இருக்கும் ஆபத்துகள் பற்றியும், அந்த நிலையிலிருந்த்து பூமித்தாயை நாம் தான் காக்க வேண்டும் என்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும், எவையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியதோடு நிறுத்திவிடாமல் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக ‘பூதாளம்’ என்ற குறும்படம் ஒன்றை யூடியூப் தளத்தில்அவர் வெளியிட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த குறும்படம் பாமர மக்களுக்கும் புரியும் விதமாக எளிய முறையிலும், விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியில் தோண்டப்படும் சுரங்கங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அழுத்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இக்குறும்படம் அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அவர் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில்  நடித்திருக்கிறார்.

Categories

Tech |