Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசா இருந்தாலும்…. ஆம்புலன்ஸா இருந்தாலும் நடந்து வாங்க…… கிராம மக்கள் அடாவடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பொதுமக்களே முள் வேலியை  கொண்டு தடுப்பு பாதை அமைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர்களுக்கு, வெளி மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அதற்கான பல்வேறு தடுப்பு பணிகளை அந்தந்த மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகசிப்பள்ளி என்னும் ஊராட்சி சார்பில் சேலம் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் மோட்டூர் எனும் பகுதியில் இருக்கக்கூடிய பிரிவு சாலையில் உள்ள கிராமத்தில் வெளியாட்களின்  வாகனங்கள்  ஊருக்குள் வரக்கூடாது என்பதற்காக முள்வேலி அமைத்தும்,

கற்களைப் போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் வெளியாட்கள் மட்டுமல்லாமல் ஒரு அவசர தேவைக்காக அரசு அலுவலர்களின் வாகனங்கள் கூட உள்ளே நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உள்ளே செல்ல வேண்டுமென்றால், சிறிது நேரத்துக்கு  பின்பு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் அரசு அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |