தமிழில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர், சிம்பு தான் என்னுடைய முதல் நண்பர் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் விஸ்ணு விஷால் வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்த அவர் தொடர்ந்து ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் காடன், எப்.ஐ.ஆர், மோகன்தாஸ் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இவர் தனது முதல் படத்திற்குப் பின் தமிழ் திரையுலகில் தன்னுடைய முதல் நண்பர் சிம்பு தான் என்று கூறியுள்ளார்.
மேலும், சிம்பு, தொழில்துறையில் மிகவும் வெளிப்படையாக பேசும் நபர் எனக் கூறும் விஷ்ணு, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார். தான் ‘ராட்சசன்’ திரைப்படப் படப்பிடிப்பில் இருக்கும் பொழுதே சிம்பு சினிமா மற்றும் நடிப்பு குறித்த பெரும் அறிவைப் பெற்றார் எனவும் கூறியிருந்தார்.