Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம் – பேராயர் ஜார்ஜ் அந்தோணி!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம் என பேராயர் ஜார்ஜ் அந்தோணி அறிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் மனைவி ஆனந்தி சைமன், கீழ்பாக்கம் கல்லறையில் தனது கணவரின் உடலை மறுஅடக்கம் செய்ய வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம் என பேராயர் ஜார்ஜ் அந்தோணி அறிவித்துள்ளார்.

Categories

Tech |