Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…கருத்து வேறுபாடுகள் உண்டாகும்…சுபகாரியப் பேச்சுகளில் தடை நீங்கும்….

 தனுசு ராசி அன்பர்களே… இன்று புதியவர்கள் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்த கூடிய வாய்ப்புக்கள் சிலருக்கு அமையும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரியம் ஆகும்.

இன்று தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் நல்லபடியாக முடியும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வந்து சென்றாலும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. முகத்தில் மலர்ச்சி இருக்கும் பெண்களால் முன்னேற்றமான சூழ்நிலை சந்திக்கக்கூடும்.

தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் ஓரளவு சரியாக வெளிவரும், ஆனால் பெரிய முதலீடுகளை மட்டும் தயவு செய்து இப்போதைக்கு இழக்க வேண்டாம் அதில் கவனம் கொள்ளுங்கள்.அது போலவே இப்போதைக்கு யாரிடமும் கடன் ஏதும் கொடுக்க வேண்டாம் நீங்களும் தேவைக்காக கடன் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இருக்காது.

காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாகவே இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் நல்லது.இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று  குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாடு மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்டமான எண்கள்:  4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |