Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு …பொறுமையுடன் செயல்படுவீர்கள் …குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் …!!

மிதுனம் ராசி அன்பர்களே …!!  இன்று எதிலும் பொறுமையுடன் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும்.  காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.  பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.  வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும்.  அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.  வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்பட கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.  இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.  மறைந்த பொருள்கள் அனைத்தும்  கிடைக்கும்.

அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் தான் இருக்கவேண்டும்.  மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு நேரிடலாம்பார்த்துக்கொள்ளுங்கள்.  தொழிலதிபர்கள் நினைத்தபடி புதிய ஒப்பந்தம் போடுவார்கள்.  அது  எதிர்பார்த்தபடி லாபம் கொடுக்கும்.  மனம் உற்சாகமாக தான் இருக்கும்.  காதில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.  திருமண முயற்சி வெற்றியை கொடுக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.  குடும்பத்திலும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

 அதிர்ஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |