Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு …உடல்நலம் சீராக இருக்கும் …உற்சாகமாக செயல்படுவீர்கள் …!!

சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும்.  பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும்.  காரியங்களில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும்.  பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.  உறவினர்கள், மற்றவர்கள் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும்.  கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் மருத்துவ செலவை குறைக்கலாம்.

கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து சேரும் கவலை வேண்டாம் சரியாகிவிடும்.  தொழிலதிபர்கள் சந்தையில் அதிக போட்டிதான் எதிர்கொள்ளவிருக்கும்.  பங்குச்சந்தையில் உள்ளவர்கள் கொஞ்சம் கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள். பெரிய முதலீடு இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்.  மிக முக்கியமாக மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற எந்த வித பிரச்சனைகளிலும் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதை இன்று நீங்கள் ஆலோசித்து தான் செய்ய வேண்டியிருக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்களின் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்  : நீளம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |