கன்னி ராசி அன்பர்களே : இன்று எதிர்பாராத வகையில் .சில சில பிரச்சனைகள் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் யாருக்கும் வாக்குருதி கொடுக்க வேண்டாம். மிகமுக்கியமாக வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம் நல்லது. உங்களுக்கான சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். இறை வழிபாட்டுடன் தான் இன்றைய நாளை நீங்கள் தொடங்க வேண்டும். மிக முக்கியமாக புதிய முயற்சிகளில் ஏதும் செய்ய வேண்டாம். சகோதர வகையில் சில வாக்குவாதங்கள் வந்து சேரும். குடும்பத்தாரிடம் கொஞ்சம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள் கோபப்படக் கூடும்.
கோபத்தை கைவிட்டால் இன்றைய நாளை நீங்கள் பொன்னான நாளாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். அதேபோல இன்று எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளில் ரொம்ப கவனம் வேண்டும். கூடுமாணவரை புதிய முயற்சிகளை தள்ளிப் போடுது தான் சிறப்பு. வியாபாரம் சார்ந்த விஷயங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற வரவை பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து சேரும் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் இருந்து வந்த பிரச்சனைகள் மென்மேலும் பெரிதாகும் இன்றைய நாளில் நீங்கள் கண்டிப்பாக அமைதியை கடைபிடிக்க வேண்டும். கூடுமானவரை தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள் அது போதும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். சிலர் வில்லங்கங்கள் உங்களுக்கு காத்திருக்கும் இன்று வெற்றி பெறுவதற்கு கடுமையாக தான் உழைக்க வேண்டும். பிரிந்து சென்ற திடீர் சொந்தம் உங்கள் வீடு தேடி வரும்.
பெண்களுக்கு தொலைதூரத் தகவல் மன மகிழ்ச்சியை கொடுக்கும் பயணங்களில் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும் மீண்டும் ஒருமுறை பயணங்களில் கவனம் இருக்கட்டும் என்று எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த காரியத்தையும் நீங்கள் செய்ய வேண்டாம் நிதி மேலாண்மையில் கவனம் இருக்கட்டும் பணப்பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும் யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதில் கவனம் இருக்கட்டும். இன்று செலவு அதிகமாக தான் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
கூடுமானவரை மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு மட்டும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் . இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 3 அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்