இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த கொரோனாவுக்கு சாதி, மதம், இனம் என வேறுபாடெல்லாம் தெரியாது.. அனைத்து மக்களிடமும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இருப்பினும், கொரோனா இந்தியாவில் பரவுவதற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற ரீதியில் தொடர்ந்து இங்கு வெறுப்புணர்வுப் பரப்புரை சில நபர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
டெலிவரி நபரும் தன்னுடைய பெயரைக் கூறியுள்ளார். அதற்கு, “நான் இஸ்லாமியர்களிடம் இருந்து எந்த ஒரு பொருள்களையும் வாங்க மாட்டேன்” என்று கஜனன் சதுர்வேதி சடாரென்று மனம் நோகும் படி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து போன டெலிவரி நபர் அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டார்.
இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து டெலிவரி நபர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.. அந்த புகாரை அடுத்து, கஜனன் சதுர்வேதி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295(A) – (மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் சாதி மத பேதமின்றி அனைவருமே சமம் என்று ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு சிலர் இது போன்று நடப்பது வேதனையளிக்க கூடியதாக இருக்கிறது…