Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது…. 681 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20,471லிருந்து 21,393ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 652லிருந்து 681ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960லிருந்து 4,258ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,935ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 27 பேர் உயிரிந்துள்ளனர். ஜோத்பூரில் 20, ஜெய்ப்பூரில் 12, நாகூரில் 10, ஹனுமன்கர் & கோட்டாவில் தலா 2, அஜ்மீரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 344 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,649 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 789 பேர் குணமடைந்துள்ளர், மேலும் 269 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மும்பையில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை தர மகாராஷ்டிர அரசுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |