குமரியில் வாலிபருக்கு லிப்ட் கொடுத்த குற்றத்திற்காக டிரைவர் ஒருவரின் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கும் அபாயம் இருப்பதால், ஆங்காங்கே பிழைப்பிற்காக சென்ற இளைஞர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில்,
ஓசூரிலிருந்து உரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் வைத்து சோதனை செய்யப்பட்டது. அதில், விஷ்ணு என்ற ஆன்லைன் வர்த்தக நிலைய மேலாளர் இருந்தார். அவர் லிப்ட் கேட்டு லாரியில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களிடம் விரிவான விசாரணை மேற்கொள்கையில், தொழில்ரீதியாக விஷ்ணு ஓசூர் சென்றதாகவும், ஊரடங்கு காரணமாக அங்கு சிக்கி கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் குமரி மாவட்டத்திற்கு செல்லும் லாரி எதுவென கேட்டறிந்து, அதில் பயணம் மேற்கொண்டு சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்து ஏறி வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து எந்தவித முறையான அனுமதியின்றி இம்மாதிரியான பயணத்தை மேற்கொண்டதன் காரணமாக லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்து,இருவருக்கும் கொரோனா அறிகுறி இருக்கிறதா? என்று சோதனை செய்தனர். அதில் கொரோனா இல்லை என இருப்பினும், 14 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.