கொரோனா வைரஸை தடுப்பதற்கும், நாம் பாதுகாப்பாக இருப்பதற்கும் உலக சுகாதார நிறுவனம் சில அடிப்படை நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கியுள்ளது.
1. தினமும் உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டோ அல்லது சானிடைசர் கொண்டோ நன்றாக கழுவுங்கள்.
2. இருமல் மற்றும் தும்மல் இருக்கக்கூடிய நபர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி விட்டு பேசுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
3. கைகள் சுத்தமாக இல்லாத நிலையில் மூக்கு, வாய், கண்கள் என தேவையில்லாமல் தொடக்கூடாது.
4. இருமலின் போதோ அல்லது தும்மல் ஏற்படும் பொழுதோ முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அல்லது மூக்கு பகுதியை துணி மற்றும் டிஸ்யூ பேப்பரால் மூடி கொள்ளுங்கள்.
5. காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை தொட்டதும் அலட்சியம் காட்டாமல் உடனே கைகளை கழுவிடுங்கள். அவை…
- டிவி ரிமோட்
- வாகன கைபிடிகள்
- நீர் அருந்தும் குவளைகள்
- மின்சார விளக்கு மற்றும் உபகரணங்கள்
- பொருட்கள் வைக்கும் பைகள்
- கதவுகள் மற்றும் கைபிடிகள்
- மாடிப்படி கைபிடி
- டேபிள் டாப்
- பணம்
- நாணயங்கள்
- கணினிகள் மற்றும் அவை தொடர்பான பொருட்கள்
- மொபைல்/ஸ்மார்ட்போன்
- இருக்கை கைபிடிகள்
- செல்லப் பிராணிகள்
- காய்கறி வெட்டும் பலகை
- சமையலறை ஸ்பாஞ்ச்
- பேனாக்கள்
- படுக்கை விரிப்புக்கள் மற்றும் முகம் துடைக்கும் துணி, தனிமையாக பயன்படுத்துங்கள்.
உங்களால் முடிந்தவரை அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை உங்களுக்கென்று தனியாக வைத்து கொண்டு பயன்படுத்துங்கள். இப்படி செய்வதனால் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள முடியும்.