Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்… பரிசோதனைக்கு பிசிஆர் அவசியம்: ஐசிஎம்ஆர்!

கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என கொரோனவை கண்டறிய பிசிஆர் டேஸ்ட் அவசியம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் அனுப்பியுள்ளது.

தவறான முடிவுகளை தருவதாக சில மாநிலங்கள் கூறியதாக 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன.

இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்த கிட்கள் தவறான முடிவுகளை தெரிவிக்கிறது என்று மாநில அமைச்சர் புகார் அளித்துள்ளார்.

இந்த முடிந்த நம்பகத்தன்மை வெறும் 5.4% மட்டுமே உள்ளது. 100 பேருக்கு சோதனை செய்தால் அதில் வெறும் 5 பேருக்கு மட்டுமே முடிவு சரியாக வந்துள்ளது. மீதம் 95 பேருக்கு தவறான தகவல் வந்துள்ளது. எனவே, இது தொடர்பான தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், ஹரியானா மாநிலத்தில், இரண்டு சீனா நிறுவனங்களிடம் சுமார் 1.1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளுக்கான ஆர்டர்களை ரத்து செய்தது.

இந்த நிலையில், அதிவிரைவு கருவிகளை கொரோனா தொற்று கண்டறிய 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியிருந்தது. தற்போது, அதற்கான விளக்கத்தையும் ஐசிஎம்ஆர் வழங்கியுள்ளது. அதில், கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் கிட்டை பயன்படுத்தவேண்டும் என்றும், கொரோனாவை கண்டறிய பிசிஆர் கருவிகள் அவசியம் என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |