Categories
தேசிய செய்திகள்

நான் யாருன்னு தெரியுமா…? “மண்டியிடு” கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி….!!

ஊரடங்கு காலத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல்படை அதிகாரியை மண்டியிட வைத்த  அரசு அதிகாரி மீது நடவடிக்கைஎடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி,

ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக பணிக்குத் திரும்பிய அரசு அதிகாரி மனோஜ்குமார் என்பவரது காரை நிறுத்தி ஆய்வு செய்வதற்காக பணியில் இருந்த ஊர் காவல் படையைச் சேர்ந்த கணேசன் என்பவரை மண்டியிட்டு தோப்புகரணம் போட செய்துள்ளார் அந்த அதிகாரி. இதற்கு கண்டனம் தெரிவித்த பொதுமக்கள், அதிகாரி மீது தகுந்த  நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |