Categories
உலக செய்திகள்

சும்மா கிடையாது…! ”அவரு கட்டுப்பாட்டுல இருக்கு” அமெரிக்கா தகவல் ….!!

கிம் ஜாங் உடல்நிலை சரியில்லாத பொழுதிலும்  அனைத்து கட்டுப்பாடுகளையும் அவர் வசமே வைத்துள்ளதாக அமெரிக்கா ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சில நாட்களாக அதிபர் கிம் ஜாங் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. அதோடு வட கொரியாவை உருவாக்கியவரும், கிம்மின் தாத்தாவுமான கிம் சுங்கின் பிறந்த நாள் விழா கடந்த 15ஆம் தேதி நடந்தது. அந்த விழாவிலும் அதிபர் கிம் ஜாங் கலந்து கொள்ளவில்லை. 2011ஆம் ஆண்டு அதிபராகபதவியேற்ற பின்னர் ஒருமுறை கூட தனது தாத்தாவான கிம் சுங் பிறந்தநாள் விழாவை, கிம் ஜாங் தவறவிட்டதில்லை.

இதனைத்தொடர்ந்து, உடல்நலக் கோளாறு காரணமாக கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்  அமெரிக்க ராணுவ உயர் அலுவலர் இது குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சூழலிலும், வடகொரிய ராணுவத்தின் கட்டுப்பாடு முழுவதும் அதிபர் கிம் கையில் தான் உள்ளது எனவும், அரசின் அணைத்து பிடிகளையும் , அதிபர் கிம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |