தமிழகத்தில் 3ஆம் தேதி வரை செயல்பட தடை இல்லை என தமிழக அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இருபதாம் தேதி முதல் என்னென்னவெல்லாம் இயங்கலாம் என்று ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. 17 பேர் கொண்ட அந்த நிபுணர் குழு அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு முடிவுகளை தமிழக அரசுக்கு விளக்கியது.
இந்த நிலையில் மே3ஆம் தேதி வரை தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி என்பது கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல மத்திய மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் 33 சதவீத ஊழியர்களுடன் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கட்டுமானப் பணிகளைப் பொறுத்தவரை டேங்க் கட்டுவது, பில்டிங் கட்டுவது, மின்சாரம், குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள் மருத்துவமனை, கல்லூரிகள் போன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அரசானை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில்தான் ஊரடங்கால் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கும் மேலாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் பல்வேறு தொழிலாளர்கள், ஏழ்மை நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு குறிப்பாக 100 நாள் வேலைவாய்ப்பு, கட்டுமான தொழில் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.