Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாவை தொடர்ந்து…. மகனுக்கும் வில்லனாகும்….. விஜய் சேதுபதி….!!

நடிகர் விஜய்சேதுபதி இளைய தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவரது மகனுக்கும் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

தெலுங்கு நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது இதனுடைய புதிய அப்டேட்டாக இந்த படத்தில் கதாநாயகனாக இளையதளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிக்க உள்ளதாகவும், இதிலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார்.

தற்போது அவரது மகன் சஞ்சய்க்குன் அவர் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தெலுங்கில் ஹிட் கொடுத்த உப்பென்னா திரைப்படம் தமிழிலும் ஹிட் கொடுத்தால், விஜய் மகன் சஞ்சய்க்கு தமிழ் திரையுலகில் மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தரும் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |